HEALTH RECIPE

பேரீச்சம்பழ பாயசம்"

இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23 கலோரிகள் உள்ளன என்பது வரப்பிரசாதம்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
வெல்லம் நறுக்கியது - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை


பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

for more koodal.com...